பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த இலங்கை தமிழப் பெண்ணான லொஸ்லியாவுக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு, செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா விரைவில் கோலிவுட் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
இதற்கிடையே, நேற்று முன் தினம் லொஸ்லியாவின் தந்தை திடீரென்று உயிரிழந்த சம்பவத்தால் லொஸ்லியாவின் குடும்பம் மட்டும் இன்றி, அவரது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரபலங்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
நன்றாக இருந்த லொஸ்லியாவின் தந்தை கனடா நாட்டில் திடீரென்று மரணமடைந்ததால், அவரது மரணத்தின் பின்னணி குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில், லொஸ்லியாவின் தந்தை ஹார்ட் அட்டாக் மூலம் தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இரவு 2 மணி வரை வேலை செய்துவிட்டு வந்து படுத்தவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...