Latest News :

‘அரண்மனை 3’ படத்தில் இடம்பெறும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி!
Thursday November-19 2020

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’ சீரிஸ் திரைப்படங்களின் முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக ‘அரண்மனை 3’ உருவாகி வருகிறது.

 

ஆர்யா, ராஷி கன்னா, சுந்தர்.சி, ஆண்டிரியா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சண்ட் அசோகன், மதுசூதன் ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலபள்ளி லீலா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இளம் இறங்கியுள்ளார்கள்.

 

இப்படத்திற்காக சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் ரூ.2 கோடி செலவில் கலை இயக்குநர் குருராஜ் கைவண்ணத்தில் பிரம்மாட்ன அரண்மனை செட் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் பிரம்மாண்டமான முறையில் சண்டைக்காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் உச்சக்கட்ட சண்டைக் காட்சியான இச்சண்டைக்காட்சி 11 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.

 

இந்த சண்டைக்காட்சியை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்துள்ளார். இதன் மூலம் இயக்குநர் சுந்தர்.சி முதல் முறையாக ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்னுடன் கைகோர்த்துள்ளார்.

 

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுந்தர்.சி முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை நிறைந்த ‘ஆக்‌ஷன்’ படத்தை இயக்கினார். அப்படத்தை தொடர்ந்து ‘அரண்மனை 3’ யில் தான் மிக பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை வைத்துள்ளார்.

 

பொதுவாக பேய் படங்களில் காமெடியும், கிராபிக்ஸும் தான் நிறைந்திருக்கும். ஆனால், சுந்தர்.சி தனது ‘அரண்மனை 3’ படத்தில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை வைத்திருப்பதோடு, அவற்றுக்கு கோடி கணக்கில் செலவு செய்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

குஜராத் ராஜ்கோட், சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற இடங்களில் தொடர்ந்து படப்பிட்ப்பு நடத்தி வரும் ‘அரண்மனை 3’ குழுவினர் படத்தை 2021 சம்மர் ஸ்பெஷலாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Related News

7069

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படம் துவங்கியது!
Wednesday November-19 2025

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!
Wednesday November-19 2025

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

Recent Gallery