லொஸ்லியாவின் தந்தை மரணத்தில் புது திருப்பம்! - உறவினர் வெளியிட்ட உண்மை
Friday November-20 2020

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற லொஸ்லியா, தற்போது சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று உயிரிழந்தார். கனடாவில் பணியாற்றி வரும் மரியநேசன், இரவு தூங்கும் போது படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார். தற்போது அவரது உடல் இலங்கைக்கு கொண்டு செல்லும் வேலைகளில், குடும்பத்தார் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

அதே சமயம், மரியநேசனின் மரணம் குறித்து பல வதந்திகள் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக அவர் அதீத மதுபோதையினால் உயிரிழந்ததாகவும், அவர் படுக்கையில் நிர்வாணமாக இருந்ததாகவும் தகவல் பரவி வருகிறது. 

 

இந்த நிலையில், மரியநேசனின் மரணத்திற்கான உண்மையான காரணம் பற்றி லொஸ்லியாவின் உறவினர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடலை இலங்கை கொண்டு வர இரண்டு வாரங்கள் ஆகும். கொரோனா காரணமாக இந்த கால தாமதம் தவிர்க்க முடியாதது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அவரது இறப்பு இயற்கையானது. தயவு செய்து  வதந்திகளை பரப்ப வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளனர்.

Related News

7070

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery