Latest News :

தஞ்சையின் அடையாளமான பப்ளிக் ஸ்டாரின் ‘பரம்பரை வீடு’
Tuesday November-24 2020

தமிழகர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துறைக்கும் மாவட்டங்களில் தஞ்சை மிக முக்கியமானவை. அந்த தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் விஷயங்கள் பல இருக்கும் நிலையில், தஞ்சையின் புதிய அடையாளமாகவும், கூடுதல் பெருமை சேர்க்கும் வகையிலும் நடிகர் பப்ளிக் ஸ்டாரின் ‘பரம்பரை வீடு’ உருவெடுத்துள்ளது.

 

தனது சமூக சேவை மற்றும் உதவும் பன்பினால் தஞ்சை மக்களின் நட்சத்திரமாக வலம் வந்தவர், ‘களவாணி 2’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிலும் நட்சத்திரமாக வலம் வர தொடங்கியவர் ‘டேனி’ படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை தன்னை நல்ல நடிகராக நிரூபித்தார். விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.

 

Parambarai House

 

தொழில், சினிமா, சமூகப்பணி என்று பிஸியாக இருக்கும் பப்ளிக் ஸ்டார், பாரம்பரியம் மிக்க தனது முன்னோர்களின் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த வீடு ஒன்றை தற்போதைய பாணிக்கு ஏற்றவாறு நவீன வசதிகளுடன், அதே சமயம், பழமை மாறாத வகையில் புதுப்பித்துள்ளார்.

 

தஞ்சை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வல்லத்தில் தான் இந்த வீடு உள்ளது. நடிகர் பப்ளிக் ஸ்டாரின் முன்னோர்கள் வாழ்ந்த இந்த பரம்பரை வீடு, புதுப்பிக்கப்பட்ட முறை மற்றும் புதுமை கலந்த பழமையான அம்சங்கள், அதன் உள்வடிவமைப்பு மற்றும் சுற்றுப்புறம் என அனைத்தும் ஒரு வரலாற்றின் அடையாளமாக திகழ்கிறது.

 

Parambarai House

 

பப்ளிக் ஸ்டாரின் இந்த புதுப்பிக்கப்பட்ட வீட்டை பார்ப்பதற்காகவே தினமும் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடிவிட, தஞ்சை பெரிய கோவிலைப் போல், இந்த வீடும் தஞ்சையின் அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது, என்று சொன்னாலும் அது மிகையாகாது.

 

சுமார் 2000 சதுர அடியில் உள்ள இந்த வீட்டை புதுப்பித்தது குறித்து பப்ளிக்ஸ் ஸ்டார் துரை சுதாகரிடம் கேட்டதற்கு, “என்னுடைய முன்னோர்கள் வாழ்ந்த வீடு இது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான வீடாக இருந்தாலும், பல வசதிகள் கொண்ட வீடாக இருப்பதோடு, வரலாற்று அடையாளமாக திகழும் வீடாகவும் உள்ளது. இந்த வீட்டை கடந்து போகிறவர்கள், சில நிமிடங்கள் நின்று வீட்டின் தோற்றத்தை ரசித்து விட்டுதான் போவார்கள். அந்த அளவுக்கு அதன் தோற்றம் இருக்கும். அதனால், தான் இந்த பழமை வாய்ந்த வீட்டை, புதுமையாக்க நினைத்தேன்.

 

Parambarai House

 

இதற்காக எவ்வளவு செலவு செய்தேன், என்பது விஷயமல்ல. இந்த வீட்டை பார்ப்பவர்கள், இதுபோன்ற பழமையான வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டாமல், இப்படி பழமையில் புதுமையை புகுத்தினால், நமக்கு அடுத்த தலைமுறைகள் நம் கட்டிட கலையின் சிறப்பை அறிய ஒரு வாய்ப்பாக அமையும். அதற்காக தான் இந்த முயற்சியை மேற்கொண்டேன். ஆனால், தற்போது இந்த வீடே எனக்கு அடையாளமாக உருவெடுத்து வருவதோடு, ‘பரம்பரை வீடு’ என்று பாப்புலராகி வருவது, எனது உழைப்புக்கு கிடைத்த பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

வீட்டின் அனைத்து புகைப்படங்களையும் பார்க்க இங்கே க்ளீக் செய்யவும் - பரம்பரை இல்லம்

Related News

7077

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படம் துவங்கியது!
Wednesday November-19 2025

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!
Wednesday November-19 2025

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

Recent Gallery