தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மூன்று சீசன்களைப் போல் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும், பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட நிகழ்ச்சி தயாரிப்பு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, நிகழ்ச்சியில் சரியாக விளையாட போட்டியாளர்களை வெளியேற்றி வருவதோடு, புதிய திருப்பத்தை ஏற்படுத்த சில புதிய போட்டியாளர்களை களம் இறக்க முடிவு செய்ததோடு, ஏற்கனவே போட்டியில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தியை மீண்டும் போட்டியில் களம் இறக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த வாரம் ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டில் நடந்த சோகமான சம்பவத்தால், ஒட்டு மொத்த போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்கள்.
அதாவது, நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது. மேலும், சென்னையை ஒட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால், அடையாறு ஆற்றுப் பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருக்கும் பிக் பாஸ் வீடு அமைந்துள்ள இ.வி.பி ஸ்டுடியோ செம்பரம்பாக்கம் ஏரி அருகே இருப்பதால், ஏரியை திறந்த சில மணி நேரங்கள் இ.வி.பி ஸ்டுடியோவில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதோடு, பிக் பாஸ் வீடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்று இரவு வெள்ள நீர் முடிழுவதும் வடிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி வெள்ளநீர் வடிந்தால், நாளை போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார்கள், என்றும் கூறப்படுகிறது.
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...