’மாஸ்டர்’ ரிலீஸ் தேதி வெளியானது!
Saturday December-05 2020

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரோனா பாதிப்பால் கடந்த 8 மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. அதே சமயம், படத்தை ஒடிடி-யில் வெளியிடப் போவதில்லை, திரையரங்குகளில் தான் வெளியிடுவோம், என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

 

இதற்கிடையே, திரையரங்கில் படம் வெளியான தயாரிப்பாளர் முதலீடு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி தொகை வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், தியேட்டர் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பங்கீட்டு தொகையில் மாற்றம் செய்ய வேண்டும், என்று ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், ‘மாஸ்டர்’ எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திரைப்படங்களை ஒடிடி-யில் வெளியிடாமல் தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டும். கொரோனா பாதிப்பால் திரையரங்கங்கள் மூடப்பட்டிருந்ததால், தற்காலிகமாக ஒடிடி-யில் வெளியிட வேண்டுமே தவிர, அதையே நிரந்தரமாக பின்பற்றக் கூடாது.

 

மாஸ்டர் படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும், என்று நான் கூறினேன். அதன்படி படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என்று அறிவித்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் முடிவை  வரவேற்கிறேன். ‘மாஸ்டர்’ படத்தை ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால், அது குறித்து பரிசீலனை செய்யப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

ஆக, ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

Related News

7097

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery