சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சீரியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சக நடிகர், நடிகைகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும், சித்ராவுக்கும் தொழிலதிபர் ஹேமந்துக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அவர்கள் சமீபத்தில் பதிவு திருமணம் செய்துக் கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், சித்ராவின் கணவர் ஹேமந்த் தவறான மனிதர் என்றும், அவருக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், சித்ராவின் தொழிகளான சில நடிகைகள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், சித்ராவின் மரணம் குறித்து காவல் துறையில் புகார் அளித்திருக்கும் அவரது தந்தை, தனது மகளின் தற்கொலையில் எந்தவித சந்தேகமும் இல்லை, என்று கூறியிருப்பதோடு, மகள் இறந்த துக்கத்தை துளியும் வெளிக்காட்டாமல், ரொம்ப சாதாரணமாக ஊடகங்களுக்கு பேட்டியளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...