பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி பல திரைப்படங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் சொல்லாத மற்றும் பெண்களுக்கான ஒரு எச்சரிக்கையான ஒரு விஷயத்தை சொல்ல வருகிறது ‘சூறாவளி’ திரைப்படம்.
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை வைத்து பணம் பறிக்கும் கும்பல் குறித்து அவ்வபோது பல செய்திகள் வெளியானாலும், இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றது. அந்த வகையில், இதுபோன்ற குற்றங்களில் இருந்து பெண்கள் தங்களை காத்துக் கொள்ள எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்ற விஷயத்தை கமர்ஷியலாக சொல்கிறது ‘சூறாவளி’
கதைப்படி, வடமாநிலங்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட கும்பல் ஒன்று அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்குள் வருகிறது. இங்கே வந்த அந்த கிரிமினல்ஸ் கும்பல் பல வீடுகளில் வேலை செய்வது போல் சென்று அங்குள்ள குளியல் அறைகளில் கேமராவை மறைத்து, பெண்கள் குளிப்பதை படமெடுத்து, அதை வைத்து அப்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறிப்பதை ஒரு வேலையாக செய்கின்றனர். பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கவே காவல்துறை உஷாராகிறது.
ஒரு பண்னையாரிடம் கூலி வேலைக்கு சென்ற கதாநாயகனின் நேர்மையை நேசித்த பண்னையாரின் மகள் ( கதாநாயகி ), நாயகனை நேசிக்கிறாள். இப்படிப்பட்ட சூழலில் அந்த கும்பல் கதாநாயகி வீட்டிலும் அதே கைவரிசையை காட்ட, இதை அறிந்து கொண்ட ஹீரோ அக்கும்பளை சூறாவளி போல் சூறையாட தயாராகிறார். அவர்களை காவல்துறை சூறையாடுகிறதா? அல்லது ஹீரோ சூரசம்ஹாரம் செய்தாரா? என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்கள்.
லால்ராய் அசோசியேட்ஸ் சார்பில் பி.லால்பகதூர் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுது பாலு & பால்கி இயக்கியுள்ளனர். தர்மா, தர்ஷினி, ஆலிஷா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜேக்கம் சாம்வேல் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சந்திரன்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...