சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, 2020 ஆம் ஆண்டின் மிக முக்கியமான படம் என்ற பெருமையும் பெற்றது.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த இப்படத்தின் கதை, ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தியது என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்த இந்தப் படத்துக்கு இணை தயாரிப்பாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரப்பாண்டியன் பணிபுரிந்திருந்தார். மேலும், 2டி நிறுவனமும் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தியது.
இந்தப் படம் வெளியான முதலே, திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என அனைவருடைய பாராட்டு மழையிலும் நனைந்தது. தமிழ்த் திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி, இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலருமே படத்தைப் பார்த்துப் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். பலரும் படத்தைப் பாராட்டி ட்வீட் செய்யவே, #SooraraiPottru என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. 2020-ம் ஆண்டு இந்திய அளவில் அதிகப்படியாக ட்வீட் செய்யப்பட்ட படங்களின் ஹேஷ்டேக்குகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனை ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த மகுடமாக அமைந்துள்ளது கூகுள் தேடல். 2020-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை அறிவித்துள்ளார்கள். அதிலும் 2-ம் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது 'சூரரைப் போற்று'. இந்த தேடல் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்தியப் படத்தின் பெயர் 'சூரரைப் போற்று' மட்டுமே. மக்கள் மத்தியில் தங்களுடைய கடும் உழைப்பு எந்தளவுக்குப் போய் சென்றுள்ளது என்பதை இந்த 2 சாதனைகள் மூலம் தெரிய வந்துள்ளதால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...