தமிழ் சினிமாவில் சமீபத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான இப்படம், விமர்சன ரீதியாகவும், வியாபர ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றதோடு, 3 தேசிய விருதுகளையும் வென்றது.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்ற பல முன்னணி நிறுவனங்களும், நடிகர்களும் முயற்சித்த நிலையில், நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றினார்.
பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், ‘அந்தாதூன்’ படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரமான தபு கதாப்பாத்திரத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளார்.
இது குறித்து கூறிய சிம்ரன், “இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் திரைப்படம் ’அந்தாதூன்’. பல்வேறு பகுதி மக்களைச் சென்று சேர்ந்தது. தபு அவர்களின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. துணிச்சலான, அதே நேரம் சவாலான கதாபாத்திரம். இந்தப் படத்தில் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சமீபத்தில் நான் பார்த்த படங்களில் பொன்மகள் வந்தாள் மிகவும் அர்புதமாக இருந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் ப்ரெட்ரிக் உடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாயிருக்கிறேன். படம் முழுவதும் வரும் இந்தக் கதாபாத்திரம் எனது மகுடத்தில் இன்னொரு மாணிக்கமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என்றார்.
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...