ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட சில படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியிருந்தாலும், அவை புதுமுக நடிகர்கள் நடித்த படங்களாகவே உள்ளது. ஆனால், பிரபல நடிகர் நடித்த படத்தை இதுவரை ஒரே ஷாட்டில் படமாக்கப்படவில்லை. தற்போது அந்த சாதனையை விமல் நிகழ்த்த இருக்கிறார். ஆம், விமல் நடிப்பில் உருவாகும் திகில் படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட உள்ளது.
’கழுகு 2’ படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவடிவேலன் தயாரிக்கும் இப்படத்தை ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ படத்தை இயக்கிய வீரா இயக்குகிறார். இதில் விமல் ஹீரோவாக நடிக்க, ஹீரோயின், மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் போட்டியிட்டபோது, அவருக்கு உறுதுணையாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் இயக்குநர் வீரா. இதனால் அவரை கவுரவப்படுத்தும் விதமாக, இந்த பட வாய்ப்பை, அவருக்கு சிங்காரவடிவேலன் வழங்கியுள்ளார்.

இப்படத்தின் பூஜை எளிமையான முறையில் இன்று நடைபெற்றது. படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் சென்னையில் தொடங்குகிறது.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...