தொலைக்காட்சி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா, கடந்த 9 ஆம் தேதி ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சித்ராவின் தற்கொலைக்கான காரணங்களாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
சித்ரா, தற்கொலை செய்துக் கொண்ட போது அவரது கணவர் ஹேமந்த் அவருடன் இருந்தார். அதே சமயம், சித்ராவின் தாய், சித்ராவை ஹேமந்த் தான் கொலை செய்துவிட்டதாக இறுதி அஞ்சலியில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இதையடுத்து, ஹேமந்திடம் போலீஸார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரும் அவ்வபோது மாற்றி மாற்றி பேசி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சித்ராவின் பிரேத பரிசோதனை அடிப்படையில் அவரது மரணம் தற்கொலை தான், என்று அறிவித்த காவல்துறை, சித்ராவின் அம்மா மற்றும் கணவர் கொடுத்த மன தொல்லைகளால் தான், அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்றும் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சித்ராவின் தற்கொலையில் புதிய திருப்பமாக அரசியல் பிரபலம் ஒருவரது பெயர் அடிபடுகிறது. அந்த அரசியல் பிரபலம் சித்ராவுக்கு தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மறைமுகமாக சித்ரா தரப்பில் முனுமுனுக்கப்பட்டு வந்தாலும், அந்த அரசியல் பிரபலம் யார், அவருக்கும் சித்ரா தற்கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...