நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 71 பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்,சினிமாவில் ரஜினிகாந்த் என்றுமே அண்ணாத்தே தான், என்று என்று வாழ்த்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், “தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமாவுக்கே சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 71 வயதிலும் 17 வயது இளைஞரைப் போல இயங்கும் அவரது சுறுசுறுப்புக்கும், ஸ்டைலுக்கும் நான் மட்டும் அல்ல, என்னைப் போன்று சினிமாவை நேசிக்கும் அனைவரும் ரசிகர்களாக இருப்பார்கள். சினிமாவை கடந்து, ரஜினியின் அரசியல் கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள் கூட, சினிமா என்று வந்தால் ரஜினியை நேசிக்காமல், ரசிக்காமல் இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு ரசிகராக ரஜினிகாந்த் அவர்களை ஒரு நடிகராக என்றுமே ரசித்துக் கொண்டிருக்க, அவர் இன்னும் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும், என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
‘களவாணி 2’, ‘டேனி’, ‘க/பெ ரணசிங்கம்’ ஆகிய படங்கள் மூலம் அறியப்பட்ட பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், முன்னணி இயக்குநர் ஒருவரது படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும், துரை சுதாகரின் கதாப்பாத்திரம் பற்றிய அறிவிப்பும் விரைவில் படக்குழு வெளியிட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...