Latest News :

அருண் விஜயின் மகனை நடிகனாக்கிய சூர்யா
Tuesday December-15 2020

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தனது 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் பல தரமான படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது குழந்தைகளை மையமாக வைத்து படம் ஒன்றை தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜயின் மகன் ஆர்னவ் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

 

இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும் ஆர்.பி பிலிம்ஸ் S.R.ரமேஷ் பாபு, இணை தயாரிப்பு செய்கின்றனர். சரோவ் சண்முகம் இயக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை அமரன் செய்கிறார். உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார். 

 

படம் குறித்து இயக்குநர் சரோவ் சண்முகம் கூறுகையில், “குழந்தைகளை மையப்படுத்திய குடும்ப படங்கள் ஹாலிவுட்டை ஒப்பிடும்போது நம் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதானவை. நடிகர் சூர்யா அவர்களின் 2D Entertainment நிறுவனம் எப்போதும் அழகான கருத்துள்ள குடும்ப படங்களை உலகளவிலான ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் தந்து வருகிறது. அந்த வகையில் இப்படமும் மிக அழகான குடும்பங்கள் ரசி்கும் படமாக இருக்கும். மேலும் மாஸ்டர் ஆர்னவ் விஜையின் அறிமுகப்படத்தில் பனியாற்றுவது மிக்க மகிழ்ச்சி. என்னைச் சுற்றிலும் நம்பிக்கை அலைகளும், நேர்மறைதன்மையும் நிரம்பி இருக்கிறது. எனவே படத்திலும் அந்து வெளிப்படும் என நம்புகிறேன். 

 

ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறுகையில், “குழந்தைகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஆர்னவ் விஜயை அறிமுகபடுத்துவது  எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படம் அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இக்கதை ஒரு சிறுவனுக்கும் அவனது நாய்க்குட்டிக்கும் உள்ள அழகான உறவை அவர்களுக்கிடையேயான அன்பையும், உணர்வையும் வெளிப்படுத்தும் படம்.” என்றார். 

 

இப்படத்தின் மொத்த கதையும் ஊட்டி பின்னணியில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் நடிகர் பட்டாளம் நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

Related News

7125

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!
Wednesday November-19 2025

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

Recent Gallery