Latest News :

தமிழர்களை அவமதித்த தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு!
Monday September-25 2017

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் வரும் 29 ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆவதோடு, அதே நாளில் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழகத்திலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஹிரோ மகேஷ் பாபு, ஹீரோயின் ரகுல்ப்ரீத் சிங், வில்லன் எஸ்.ஜே.சூர்ய, பரத், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தமிழில் பேசினாலும், நிகழ்ச்சி முடிந்த பிறகு தினசரி பத்திரிகைகள் பேட்டி கேட்ட போது, தமிழ் பத்திரிகைகளை தவிர்த்துவிட்டு ஆங்கில பத்திரிகைகளுக்கு மட்டும் பேட்டி கொடுத்தாராம்.

 

மகேஷ் பாபுவிடம் தினசரி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். பிறகு எந்த எந்த பத்திரிகைகள் என்று பட்டியலும் கொடுக்கப்பட்டதாம். அந்த பட்டியலில் இருந்த தமிழ் பத்திரிகைகளை நிராகரித்த மகேஷ் பாபு, சில ஆங்கில பத்திரிகைகளின் நிருபர்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்தாராம். மகேஷ் பாபுவின் இத்தகைய செயல் தமிழ் பத்திரிகைகளை மட்டுமல்ல தமிழர்களையே அவமதித்ததற்கு சமம் என்று பேசிக்கொண்ட நிருபர்கள், இந்த டப்பிங் படம் தமிழகத்தில் ஓடாது...என்று கூறி தங்களது கோபத்தை வெளிக்காட்டி கொண்டார்கள்.

 

ஏற்கனவே, தமிழ் ஊடகங்களை அவமதித்து வந்த மகேஷ் பாபு, தமிழ் நன்றாக பேச தெரிந்தாலும், எந்த இடத்திலும் தமிழ் பேசமாமல், தமிழக ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையும் தவிர்த்து வந்தவர் தான். தற்போது தமிழ் சினிமாவும், அதன் வியாபாரமும் பெரிய அளவில் உயர்ந்திருப்பதால், தனது படத்தை டப் செய்து கல்லா கட்ட முயற்சிக்கும் அவர், தமிழக ரசிகர்களை கவர்வதற்காக, இப்போது மேடையில் தமிழில் பேசினாலும், மறைமுகமாக இப்போதும் தமிழர்களை அவமதிக்கும் சில செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டு தான் வருகிறார்.

Related News

714

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

Recent Gallery