டிவி பார்க்காதவர்களையும் டிவி முன் அமர வைத்த நிகழ்ச்சியான பிக் பாஸ், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 80 நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் அறங்கேறிய நிலையில், அப்போட்டியில் பங்கேற்று தற்போது வெளியேற்றப்பட்டுள்ள நடிகர் வையாபுரியின் பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் 80 நாட்களுக்கு மேலாக இருந்த வையாபுரி, முன்னணி நாளிதல் ஒன்றின் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், “பிக் பாஸ் நிகழ்ச்சி முழுவதும் ரியல் தான். காலையில் எழுந்துக்கொள்வது முதல், இரவு தூங்கப்போவது வரை, அங்கு நடக்கும் அனைத்தும் எதார்த்தமாக நடப்பவைகள் தான். யாரும் எதையும் சொல்லிக்கொடுத்து நடப்பவை அல்ல.” என்று கூறினார்.
அவரிடம், பிக் பாஸ் வீட்டில் ஆபாசமாக உடை அணிந்துக்கொண்டிருக்கிறார்களே? என்று கேட்டதற்கு, “போட்டியில் பங்கெற்றவர்கள் அனைவரும் தங்களது சொந்த உடைகளை தான் எடுத்து வந்தார்கள், அதை தான் அணிந்துக்கொண்டார்கள். நானும் கயிலி, பணியன் என்று வீட்டில் இருப்பது போல தான் அங்கேயே இருந்தேன். நிகழ்ச்சிக்கும் போட்டியாளர்களின் உடைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவர் அவர் வீட்டில் இருப்பது போல இயல்பாக இருந்தார்கள்.” என்று பதில் அளித்துள்ளார்.
சினிமாவில் கிடைக்காத புகழும் பேரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படும் வையாபுரியை, தமிழக மக்கள் பலர் தங்களது வீட்டில் ஒரு வாரம் தங்கிட்டு போங்க, என்று அழைக்கிறார்களாம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...