Latest News :

போலிப் போராளிகளின் முகத்திரையைக் கிழிக்க வரும் ‘ஓங்காரம்’
Tuesday December-22 2020

நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதில் சில போலியான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. அப்படிப்பட்ட போலியான போராட்டங்களை நடத்தும் போலிப் போராளிகளின் முகத்திரையை கிழிக்க வருகிறது ‘ஓங்காரம்’ திரைப்படம்.

 

‘அய்யன்’, ‘சேதுபூமி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கி நடிக்கும் இப்படம், வயிற்றுப்பிழைப்பிற்காக புரட்சியாளராக வேசம் போடும் போலிப் போராளிகள் பற்றியும், அவர்கள் நடத்தும் போலியான போராட்டங்களினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அழுத்தமாக பதிவு செய்கிறது.

 

மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி நடிக்க, இளம் நாயகனாக யுகேஷ் அறிமுகமாகிறார். கதையின் நாயகியாக வர்ஷா விஸ்வநாத் அறிமுகமாகிறார். இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

சாம் ரொனால்டு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், செல்லம் ஜெயசீலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மோனீஷ் பாரதி இசையமைக்கிறார். சண்டைப்பயிற்சியை பயர் கார்த்திக் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார். கெளசல்யா ஏழுமலை தயாரிக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் பணியை ரேகா முருகன் கவனிக்கிறார்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Related News

7150

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!
Wednesday November-19 2025

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

Recent Gallery