தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவரான அமலா பால், தற்போது வித்தியாசமான கதைகளிலும், அதிரடியான கதாப்பாத்திரங்களிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், திரைப்படங்கள் மட்டும் இன்றி வெப் சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கியிருக்கும் அமலா பால், அதிலும் தரம் மற்றும் வித்தியாசத்தை காட்டி வருகிறார்.
அந்த வகையில், கன்னட சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான ‘யூ டர்ன்’ புகழ் இயக்குநர் பவன்குமார் இயக்கும் புதிய வெப் சீரிஸான ‘குடி யெடமைதே’ (Kudi yedamaithe) வெப் சீரிஸில் நடிக்கிறார்.
இந்த 8 பகுதிகள் கொண்ட ஆஹா (aha) ஒரிஜினல் தொடர், தெலுங்கு ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையிலான, ஃபேண்டஸி திரில்லராக உருவாகிறது. இத்தொடரில் அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். இது மற்ற திரைப்படங்கள், தொடர்கள் போல வழக்கமான ஹீரோ ஹீரோயின் கதாப்பாத்திரங்கள் அல்ல. இக்கதையின் மையம் ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டது.

மேலும், நந்தினி ரெட்டி இயக்கும் Netflix ஆந்தாலஜி வெப் சீரிஸ் ஒன்றில் முதன்மை வேடத்தில் நடிக்கும் அமலா பால், தனது சொந்த தயாரிப்பில் உருவாகும் ‘கடாவர்’(cadaver) படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், இப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
இப்படங்களை தொடர்ந்து ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் விஷேஷ் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் உருவாகும் இந்தி திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...