Latest News :

ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ்ப் படம்! - வைரலாகும் டீசர்
Wednesday December-23 2020

புது முயற்சியுடன் கோலிவுட்டுக்குள் நுழையும் சில இளம் இயக்குநர்கள் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான படங்களை எடுக்க முயற்சித்து வருகிறார்கள். அப்படி ஒரு இயக்குநராக கோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் ஜி.கே. இவர் இயக்கியிருக்கும் திரில்லருடன் கலந்த சைன்ஸ் பிக்‌ஷன் திரைப்படமான ‘டிஸ்டண்ட்’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே பெரும் வரவேற்பு பெற்றதோடு, திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. காரணம், ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தரத்தில் டீசர் இருப்பது தான்.

 

முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாகவும், சவுந்தர்யா நஞ்சுந்தன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

 

Distant

 

இப்படத்தை இயக்கியிருக்கும் ஜி.கே பல விருதுகளை வென்ற ‘அசரீரி’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். மேலும், இவரது மற்றொரு குறும்படமான ‘காதலின் தீபன் ஒன்று’ யூடியூபில் மில்லியன் பார்வையாளர்க்ளை கடந்து வைரலானது.

 

விஜய் சித்தார்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆதி பாடல்கள் எழுத, இளையராஜா படத்தொகுப்பு செய்துள்ளார். தேவா கலையை நிர்மாணிக்க, ஆக்‌ஷன் காட்சிகளை சுதேஷ் வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளர் பணியை கே.எஸ்.கே.செல்வா கவனிக்கிறார்.

 

சுரேஷ் நல்லுசாமி மற்றும் முருகன் நல்லுசாமி தயாரித்திருக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.

Related News

7154

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!
Wednesday November-19 2025

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

Recent Gallery