அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கலைப்புலி இண்டர்நேஷ்னல் மற்றும் வி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் மூலம் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வரும் கலைப்புலி எஸ்.தாணு, 197 ஆம் ஆண்டு திரைப்பட விநியோகஸ்தராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர், தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் தாணு, இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67 வது பொதுக்குழுவில் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தனது திரைப் பயணத்தில் 50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தாணுவுக்கு இப்பதவி, அவருடைய திரைத்துறை சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவரை கெளரவிக்கும் வகையிலும் கிடைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
தமிழ் திரையுலகம் சார்பாக பழம்பெரும் தயாரிப்பாளர்கள் எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, ஆகியோர் இப்பதவியை அலங்கரித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 71 வது தலைவராக வரும் ஜனவரி 1 ஆம் தேதி தாணு பதவி ஏற்க உள்ளார்.
இவருடன் தென்னிந்திய சினிமாவில் இருந்து துணை தலைவர்களாக சி.கல்யாண், சி.பி.விஜயகுமார், என்.எம்.சுரேஷ், ஆனந்தா எல்.சுரேஷ், டி.பி.அகர்வால் ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர். செயலாளர்களாக ரவி கொட்டாரக்காரா, ஹரிசந்த் ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர்.
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...