சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு ரெடியாகும் ‘சினம்’
Wednesday December-30 2020

அருண் விஜய் நடிப்பில், ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சினம்’. மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிக்கும் இப்படத்தை 2021 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியிட முடிவு செய்திருக்கும் படக்குழு, முன்னதாக பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. அதற்காக சர்வதேச திரைப்பட விழாவுக்கென்று தனி ஒரு பதிப்பும் உருவாகி வருகிறது.

 

படத்தின் கரு உலகளவில் அனைத்து ரசிகர்களையும் கவரும் தன்மை கொண்டதால் தான், இப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளார்களாம். மேலும், படத்தில் ஆக்‌ஷனும், உணர்வுகளும் சரிபாதியாக இருப்பதோடு, அவை படம் முழுவதுதையும் பரபரப்பாக நகர்த்தும் விதத்திலும் உள்ளதாம்.

 

அருண் விஜய் இப்படத்தில் பாரி வெங்கட் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். பாலக் லால்வானி அவரது மனைவியாகவும் தேஷினி அவர்களது மகளாகவும் நடிக்கிறார்கள். சபீர் இப்படத்திற்கு இசையமைக்க சில்வா சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார்.

 

நவீன் இயக்கத்தில் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடித்து முடித்த அருண் விஜய், அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் ‘AV31’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் முடியும் தருவாயில் உள்ளது. இதன் பிறகு ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Related News

7174

நான் ஆசைப்பட்ட திரைப்படம் ‘நீளிரா’! - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி
Saturday March-21 2026

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல! - பரத் உறுதி
Saturday March-21 2026

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என்...

பாரம்பரியமான ஆடைகள் தான் பிடிக்கும் - நடிகை காயடு லோஹர்
Saturday March-21 2026

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...

Recent Gallery