இன்று 2021 ஆம் ஆண்டின் முதல் நாள். கடந்த ஆண்டு உலகமே பெரும் துயரத்தில் தத்தளித்தாலும், இந்த புதிய ஆண்டில் அனைத்து துன்பங்களும் காணாமல் போய்விடும் என்ற நம்பிக்கையில் இந்நாளை கொண்டாட, அவர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
’களவாணி 2’, ‘டேனி’, ‘க/பெ ரணசிங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “ஆங்கிலப் புத்தாண்டை அன்புடன் வரவேற்பும். கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் அனைத்தையும் மறந்து புத்தாண்டில் புதிய ஆற்றலோடு வளமான வாழ்க்கையை நோக்கி பயணிப்போம்.
நான் நேசிக்கும் சினிமாத்துறை கடந்த ஆண்டு, கால சூழலால் பல இன்னல்களை எதிர்கொண்டு இருளில் மூழ்கினாலும், புத்தாண்டில் புதிய வெளிச்சத்தோடு மீண்டும் பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையோடும், புதிய முயற்சிகளோடும் பயணிப்போம் என்று என் திரையுலக நண்பர்கள், தொழிலாளர்கள், மானசீக குருநாதர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
‘தப்பட்டாம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், நல்ல வேடமாக இருந்தால், எந்த கதாப்பாத்திரலும் நடிக்க தயார், என்று வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...