இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தென்னிந்தியாவிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியை, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்குகிறார். கன்னடத்தில் சுதீப் நடத்துகிறார்.
இதற்கிடையே, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு முடிவடைந்தது. இதில் நடிகர் சிவ பாலாஜி வெற்றி பெற்று பரிசு தொகை ரூ.50 லட்சத்தை கைப்பற்றினார். இவர் பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள மதுமிதாவின் கணவர். சிவ பாலாஜியும், மதுமிதாவும் சேர்ந்து ‘இங்கிலீஷ்காரன்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார்கள். நடிகர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
தமிழ் பிக் பாஸ் தொடங்கப்பட்டு ஒரு மாதம் கழித்து தொடங்கப்பட்ட தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து, இரண்டாம் சீசன் இதை விடவும் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். முதல் சீசனின் படப்பிடிப்பு புனேவில் நடந்து வந்த நிலையில் இரண்டாம் சீசனை ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...