ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் சைக்காலாஜிக்கல் திரில்லர் படம் ‘எக்கோ’. இத்திரைப்படத்தில் நாயகியாக வித்யா பிரதீப் நடிக்க, தற்போது மற்றொரு நாயகியாக பூஜா ஜாவேரி ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் 'துவாரகா', தமிழில் அதர்வா-வுடன் 'ருக்குமணி வண்டி வருது' ஆகிய படங்களில் பூஜா ஜாவேரி நடித்துள்ளார்.
ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.
கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது பூஜா ஜாவேரி, ஸ்ரீகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
‘கில்லி’, ‘தூள்’, ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜான் பீட்டர் இசையமைக்கிறார். சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலையை நிர்மாணிக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என்...
மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...