Latest News :

ஒடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘முகிழ்’
Tuesday January-05 2021

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து தயாரித்துள்ள படம் ‘முகிழ்’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ரா முதல் முறையாக 12 வயது பெண்ணுக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார். இவர்களுடன், விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா முக்கிய வேடம் ஒன்றில் நடித்து நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

 

நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

 

இப்படத்தை எழுதி இயக்கியுள்ள கார்த்திக், படம் குறித்து கூறுகையில், “ரொம்ப லைவான படம் இது. விஜய் சேதுபதி டிரைலரைப்  பார்த்துவிட்டு, அவரின் சொந்த அனுபவங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டார். தன் சொந்த வாழ்வோடு தொடர்பு செய்யும் விதமாகவும் இந்த டிரைலர் இருப்பதாக சிலாகித்தார். இந்த டிரைலர் என்னை நிறைய பேசவைத்துள்ளது, எல்லாம் இந்தப்படம் செய்த வேலை என்றார். மேலும் "ஒரு பேமிலி மேனாக எனக்கு நிறைவா இருக்கு" என்றார். அவரது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் 100% சதவிகிதம் தகுதியான படமாக ரசிகர்களின் பார்வைக்கும் இப்படம் இருக்கும். 

 

ரெஜினா கசான்ட்ரா இப்படத்தில் அவரே டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் பேசுவதற்காக அவர் மிகவும் மெனக்கெட்டுள்ளார், முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசியுள்ளதால் மிகவும் சிரத்தை எடுத்து அழகாகப் பேசியுள்ளார். படத்தின் கதை, ஒரு பெற்றோர் ஒரு  குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள். அந்தக் குழந்தையாலும் அந்தக் குழந்தைக்கும் ஒரு பிரச்சனை வரும்போது பெற்றோர் அதை எப்படி கையாள்கிறார்கள் என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளோம். இப்படத்தின் டிரைலரைப் பார்த்த அனைவரும் மிகப்பெரிய பாராட்டுக்களைக் கொடுத்து வருகிறார்கள். அது எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.” என்றார்.

 

Vijay Sethupathi Daughter Sreeja in Mugizhl

 

இப்படத்திற்கு ரேவா என்ற பெண் இசையமைத்துள்ளார். மராட்டியம் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் ரேவா, இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சத்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Related News

7195

’டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படங்களின் அறிவிப்பு விழா
Wednesday November-19 2025

லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’...

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

Recent Gallery