Latest News :

நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு திடீர் திருமணம்! - காரணம் இதுவா?
Thursday January-07 2021

தெலுங்கு சினிமா மூலம் நடிகையாக அறிமுகமான ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பொறியாளன்’ படம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ‘கயல்’ படத்தில் நடித்த அவரது நடிப்பு பெரும் வரவேற்பு பெற்றதால் ‘கயல்’ ஆனந்தி என்று அழைக்கப்பட்டவர் தொடர்ந்து ‘சண்டிவீரன்’, ‘விசாரணை’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.

 

’டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்’, ’ஏஞ்சல்’, ’அலாவுதீனின் அற்புத கேமரா’, ’ராவணக் கூட்டம்’, ’கமலி ஃப்ரம் நடுக்காவேரி’, தெலுங்கில், ’ஜாம்பி ரெட்டி’ ஆகிய படங்கள் ஆனந்தி நடிப்பில் வெளியாக உள்ளன. ஆனால், கொரோனா பிரச்சினையால் இந்த திரைப்படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், நடிகை ஆனந்திக்கும், தெலுங்கானாவை சேர்ந்த தொழிலதிபர் சாக்ரடீஸ் என்பவரும் இன்று திருமணம் நடைபெற உள்ளது. ஆனந்தியின் இந்த திடீர் திருமணம் காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது.

 

அதே சமயம், ஆனந்திக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் தான் அவர் திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

ஆனந்தி - சாக்ரடீஸ் திருமணம், இன்று இரவு வாராங்கல்லில் நடக்க உள்ளது. இந்த திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்தவர்கள் யாரையும் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related News

7199

’சாருகேசி’ படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது - நடிகை சுஹாசினி நெகிழ்ச்சி
Tuesday June-24 2025

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் - ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு
Monday June-23 2025

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...

பார்வையாளர்களின் இதயத்தை மாற்றக்கூடிய படமாக ‘குட் டே’ இருக்கும் - இயக்குநர் ராஜு முருகன்
Sunday June-22 2025

நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க,  அறிமுக இயக்குநர் என்...

Recent Gallery