கமல்ஹாசன் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களை கடந்துள்ள நிலையில் போட்டியில் வெற்றிப்பெறப் போவது யார்? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களையே அதிகரித்துள்ளது.
ஓவியா இருந்தவரை பரபரப்பாக நகர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, ஓவியா வெளியேற்றத்திற்கு பிறகு மந்தமாக நகர்ந்தது, மீண்டும் நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைக்க, விஜய் டிவி செய்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், தற்போது நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் கஷ்ட்டமான டாஸ்க்குகள் மூலம் மீண்டும் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலி பங்கேற்றுள்ளார். ஆனால், அவர் போட்டியாளராக பங்கேற்கவில்லை. சிறப்பு விருந்தாளியாக பிக் பாஸ் வீட்டுக்குள் அஞ்சலி வரப்போகிறார்.
அஞ்சலி, ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலூன்’ படத்தின் புர்மோஷனுக்காக அஞ்சலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவருடன் பலூன் படத்தின் இயக்குநரும் பங்கேற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...