பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் இவர் தான்!
Friday January-08 2021

தமிழ் பிக் பாஸின் நான்காவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 90 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், இன்னும் 10 நாட்களில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. தற்போது இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்பவர்களை தேர்வு செய்யும் டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. இதில் ரியோ அதிக புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

 

இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரசிகர்களின் வாக்குகளை வைத்து பார்க்கும் போது, எப்போதும் போல ஆரி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து பாலா, ரியோ, கேப்ரில்லா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளார்கள்.

 

கடைசி இரண்டு இடங்களில் ரம்யா மற்றும் ஷிவாணி உள்ளனர். எனவே இவர்கள் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து  வெளியேறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்ற வாய்ப்பு இருப்பதால், இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியேறலாம். அதே சமயம், ஒரு போட்டியாளரை மட்டும் வெளியேற்றினால், மிக குறைவான வாக்குகள் பெற்ற ஷிவாணி வெளியேற்றப்படுவார்.

 

Related News

7200

நான் ஆசைப்பட்ட திரைப்படம் ‘நீளிரா’! - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி
Saturday March-21 2026

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல! - பரத் உறுதி
Saturday March-21 2026

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என்...

பாரம்பரியமான ஆடைகள் தான் பிடிக்கும் - நடிகை காயடு லோஹர்
Saturday March-21 2026

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...

Recent Gallery