சினத்திரை நடிகர், நடிகைகள் பலர் வெள்ளித்திரையில் ஹீரோக்களாகவும், ஹீரோயின்களாகவும் வெற்றி பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக இடம் பிடிக்கப் போகிறவர் சித்தார்த் குமரன்.
ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் உள்ளிட்ட பல நடன் நிகழ்ச்சிகள் மற்றும் ‘என் பெயர் மீனாட்சி’, ‘ஆபிஸ்’, ‘சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்கள் மூலம் மக்களிடம் பிரபலமான சித்தார்த் குமரன், ‘ரெக்க கட்டி பறக்குது மனசு’ தொடரில் நாயகனாக நடித்து தமிழக ரசிகர்களின் உள்ளத்தில் நுழைந்தவர், தற்போது ’தேன்மொழி பி.ஏ’ தொடரில் ஜாக்குலினுடன் ‘ஹீரோ சார்’ என்ற அடைமொழியில் கலக்கி வருகிறார்.
இப்படி சின்னத்திரை மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான சித்தார்த் குமரன், விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். புத்தாண்டின் புதிய துவக்கமாக சித்தார்த் குமரனுக்கு திரைப்படம் ஒன்றில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ள அப்படம் பற்றிய முழு விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளார்.
தமிழக மக்களின் பேவரைட் சின்னத்திரை நடிகரான சித்தார்த் குமரனுக்கு கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ‘சித்தார்த் குமரன் ஃபேன்ஸ் கிளப்’ என்ற பெயரில் ரசிகர் மன்றம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
லத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’...
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...