சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ’தொடரி’ மற்றும் ‘பட்டாசு’ ஆகியப் படங்களில் நடித்திருக்கும் தனுஷ் மூன்றாவது முறையாக அந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கிறார். தனுஷின் 43 வது படமாக உருவாகும் இப்படத்தை ‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’, ‘நரகாசுரன்’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார்.
இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க, ஸ்முருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதுவதோடு, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையோடு தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
லத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’...
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...