தமிழ் சினிமாவை தனது கவர்ச்சி மூலம் கிரங்கடித்த நமீதா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போதும் மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட தொடங்கியிருப்பவர், தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துவிட்டார்.
நமீதாஸ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நமீதா தயாரிக்கும் படத்திற்கு ‘பெளவ் வெளவ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நமீதா நிறுவனத்துடன் இணைந்து எஸ் நாத் பிலிம்ஸ் சார்பில் சுபாஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு முருகன் மந்திரம் வசனம் மற்றும் பாடல்கள் எழுதுகிறார். கிருஷ்ணா பி.ஏஸ் ஒளிப்பதிவு செய்ய, ரெஜிமோன் இசையமைக்கிறார். அனில் கும்பளா கலையை நிர்மாணிக்கிறார்.
இரட்டையர் இயக்குநர்களான ஆர்.எல்.ரவி - மேத்யூ ஸ்கேரியா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

‘பெளவ் வெளவ்’ படத்தை தயாரிப்பதோடு, முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கும் நமீதா, காட்டுப்பகுதியில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற போது, அங்கே இருந்த கிணறு ஒன்றில் நமீதாவின் செல்போன் விழுந்துள்ளது. அதைப்பார்த்து பதறியவர், செல்போனை பிடிக்க முயன்ற போது அவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.
நமீதா கிணற்றுக்குள் விழுந்ததைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் பதற, இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா, “கட் கட் சூப்பர்” என கை தட்டினர்.

காட்சிக்காக ரியலாக நமீதா கிணற்றில் விழ, அதை நிஜம் என்று நினைந்த மக்களால் படப்பிடிப்பில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...