பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.
’ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கான டீசரை பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்ட மிட்டிருந்தது. அதற்குள் படத்தின் டீஸர் சோசியல் மீடியாவில் நேற்று லீக் ஆனது. உடனடியாக களத்தில் இறங்கிய படக்குழு, இதற்கு காரணம் படத்தின் எடிட்டர் தான், என்பதை கண்டுபிடித்து அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் லீக் ஆகி சோசியல் மீடியாவில் வைரல் ஆன நிலையில், தற்போது ‘தேசிய தலைவர்’ படத்திற்கும் இப்படி சம்பவம் நடந்திருப்பது திரைத்துறையினரை அதிர்ச்சிய்டைய செய்துள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...