விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் படத்தை ரிலீஸ் செய்து வசூலை அள்ளிவிட வேண்டும் என்று தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, படத்திற்கு எதிராக ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை வாங்கிவிட்டார்.
இதனால், ‘மெர்சல்’ என்ற தலைப்பை மாற்றிவிட்டு ‘ஆளப்போறான் தமிழன்’ என்று தலைப்பு வைக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘மெர்சல்’ பட்த்திற்கு போட்டியாக தீபாவளியன்று ‘கொடிவீரன்’ படத்தை ரிலீஸ் செய்ய சசிகுமார் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ மெர்சலுடன் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் சிவகார்த்திகேயன் பின்வாங்கிவிட்ட நிலையில், சசிகுமார் விஜயுடன் மோத முடிவு செய்துவிட்டார்.
மெர்சல் படத்தை தமிழகம் முழுவதும் சுமார் 800 திரையரங்கங்களில் வெளியிட ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே சமயம், தனது படம் மிக சிறப்பாக வந்துள்ளதாக கூறிய சசிகுமார், அதன் தைரியத்திலேயே மெர்சல் படத்துடன் மோதுகிறேன், என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...