பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்களிடம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், தனது 4 வது காதல் மற்றும் கல்யாணத்தால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். ஏற்கனவே மூன்று பேரை திருமணம் செய்து, அவர்களை விட்டு பிரிந்த வனிதா, நான்காவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால், பீட்டர் பாலின் முதல் மனைவி போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, தனக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்த திருமணம் அல்ல, அன்பின் பரிமாற்றம் என்று வனிதா விளக்கம் அளித்தார். இருப்பினும், ஒரே வீட்டில் பீட்டர் பாலுடன் வாழ தொடங்கினார்.
இதற்கிடையே, வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிறகு அது மோதலாக முற்றியதால் இருவரும் பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து வனிதா ஐந்தாவதாக ஒருவரை காதலிப்பதாக, சூசகமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆனால், அந்த பதிவு விளையாட்டுக்காக வெளியிட்டது என்று அவரே விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், வனிதா தனது கையில் வனிதா வித் பீட்டர் பால் என்று டாட்டூவை அழித்துவிட்டு, அந்த இடத்தில் வேறு ஒரு டாட்டூவை குத்திக் கொண்டுள்ளார். தனது கையில் இருந்த பீட்டர் பாலின் டாட்டூவை மாற்றியது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வனிதா புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சில நெட்டிசன்கள், வனிதா ஐந்தாவது காதலுக்கு தயாராகிவிட்டார். இந்த புதிய டாட்டூ மூலம் உலகிற்கு சொல்கிறார், என்று தெரிவித்து வருகிறார்கள்.



கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...