தமிழ் பிக் பாஸின் நான்காவது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை பிக் பாஸ் இறுதி சுற்று நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. சுமார் 6 மணி நேரம் ஒளிபரப்பாக கூடிய இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 4-ன் வெற்றியாளர் யார்? என்பது தெரியப்போகிறது.
ரம்யா பாண்டியன், ஆரி, பாலா, ரியோ, சோம்சேகர் ஆகிய ஐந்து போட்டியாளர்களில் ஆரிக்கு தான் ரசிகர்களின் வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது. ரசிகர்களின் வாக்குகளை வைத்து பார்த்தால் ஆரி தான் வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக் குழு போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, போட்டியாளர்கள் ஐந்து பேர்களில் ரசிகர்களின் குறைவான வாக்குகள் பெற்று கடைசி சிடத்தை ரம்யா பாண்டியன் பிடித்துள்ளார். இறுதி சுற்றில் இருக்கும் ஒரே ஒரு பெண் போட்டியாளர் என்பதால், முதல் மூன்று பேர் பட்டியலில் அவர் இடம் பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு கடைசி இடம் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4 டைடில் வின்னராக ஆரி தான் வரப்போகிறார், என்று பெரும்பாலானவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ள நிலையில், சோம்சேகர் டைடில் வின்னராக வருவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரி அதிகமான வாக்குகள் பெற்றிருந்தாலும், சக போட்டியாளர்கள் அவருக்கு எதிராகவே இருக்கின்றனர். அதேபோல், பாலாவும் சக போட்டியாளர்களிடம் அவ்வபோது மோதலில் ஈடுபட்டு வந்தார். ஆனால், எவ்வித மோதலிலும், சர்ச்சையிலும் சிக்காமல், போட்டியில் அதிகம் கவனம் செலுத்தியதோடு, டாஸ்க்குகளை வென்ற சோம்சேகர், பிக் பாஸ் 4- டைடில் வின்னராக அறிவிக்கப்படலாம், என்றும் கூறப்படுகிறது.
சோம்சேகர் டைடில் வின்னராக அறிவிக்கப்பட்டால், ஆரியின் ரசிகர்கள் மட்டும் இன்றி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கும் அது பெரும் ஏமாற்றமாக இருக்கும்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...