தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் வலம் வருபவர் ஃபரீனா. பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பாணியாற்றியிருக்கும் இவர், பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
ரசிகர்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றான ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் டாக்டர்.வென்பா என்ற கதாப்பாத்திரத்தில் வில்லியாக நடித்து மக்களிடம் பிரபலமாகியிருக்கும் நடிகை ஃபரீனாவுக்கு தனி ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், நடிகை ஃபரீனாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஃபரீனா அவரை விவாகரத்து செய்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரித்ததில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஃபரீனா பிரபல தொலைக்காட்சியில் வீடியோ எடிட்டராக பணியாற்றிய அசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாகவும். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று பிரிந்தவர்கள் தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ முடிவு எடுத்திருக்கிறார்களாம்.

விவாகரத்து பெற்றவர்கள் மீண்டும் இணைய இருக்கும் விஷயம் தான், ஃபரீனாவின் இரண்டாவது திருமணம் என்று தவறான தகவல் பரவி வருகிறதாம்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...