கமல்ஹாசனுக்கு நடந்த திடீர் அறுவை சிகிச்சை!
Tuesday January-19 2021

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்காக தற்போது தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு இன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் திடீரென்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

 

இது குறித்து கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், மருத்துவர் ஜே.எஸ்.என்.மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவைச் சிகிழ்ச்சை நிபுணர் மருத்துவர்.மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார்.

 

அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார்.

 

அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

Related News

7231

நான் ஆசைப்பட்ட திரைப்படம் ‘நீளிரா’! - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி
Saturday March-21 2026

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல! - பரத் உறுதி
Saturday March-21 2026

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என்...

பாரம்பரியமான ஆடைகள் தான் பிடிக்கும் - நடிகை காயடு லோஹர்
Saturday March-21 2026

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...

Recent Gallery