விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி, ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘க/பெ.ரணசிங்கம்’. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விருமாண்டி, தனது முதல் படத்திலேயே இதுவரை சினிமாவில் சொல்லப்படாத உண்மை சம்பவம் ஒன்றை சொல்லி, விமர்சன ரீதியாகவும், வியாபர ரீதியாகவும் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், தனது இரண்டாவது படத்தின் மூலம் இயக்குநர் விருமாண்டி, சசிகுமாருடன் கைகோர்த்துள்ளார். சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இப்படமும் உண்மை சம்பவத்தை மையப்படுத்திய கதை தான்.
1975 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தை, பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் தயாரிக்கிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, டி.சிவாநாதீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த கதையை கேட்டவுடன் சசிகுமார் ஒகே சொல்லிவிட்டார். தற்போது படத்தின் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் படத்திற்கான பூஜை எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில், ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என்...
மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...