மீண்டும் ஒன்று சேர்ந்த கவின், லொஸ்லியா! - காரணம் யார் தெரியுமா?
Wednesday January-20 2021

தொலைக்காட்சி ரசிகர்களின் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது. தமிழில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், நான்காவது சீசனின் இறுதிப் போட்டி கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் ஆரி வெற்றிப் பெற்றார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசும், வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டது.

 

இதற்கிடையே, இதுவரை நடைபெற்ற நான்கு சீசன்களில், சுவாரஸ்யம் இல்லாத மிக மொக்கையான சீசனாக நான்காவது சீசன் பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் விளையாட்டு அவ்வளவாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஏன், கமல்ஹாசன் இடம்பெறும் வார இறுதி நாட்களிலில் கூட டி.ஆர்.பி வழக்கத்தை விட குறைவாக இருந்ததாகவே தகவல் வெளியாகின.

 

அதே சமயம், பிக் பாஸில் மூன்றாவது சீசன் தான் ரசிகர்களின் பேவரைட் சீசனாக இருந்தது. இதற்கு காரணம், கவின் - லொஸ்லியா இடையிலான காதல். ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும் இந்த இருவரும் காதல் குறித்து மட்டும் அல்ல, தங்களுக்கு இடையே எந்தவித தொடர்பே இல்லாத வகையில், அவர் அவர் வேலைகளில் பிஸியாகி விட்டார்கள்.

 

 

லொஸ்லியா மற்றும் கவின், இருவரும் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவ்வபோது சோசியல் மீடியாவில் வெளியிட்ட சில பதிவுகளால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பது வெட்டம் வெளிச்சமானதோடு, இருவரும் பேச்சு வார்த்தை கூட இல்லாத அளவுக்கு பிரிந்து விட்டார்கள் என்றும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், பிரிந்த லொஸ்லியா, கவின் தற்போதும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். அதுவும், விஜய் தொலைக்காட்சி மூலமாகவே. ஆம், சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 4-ன் வெற்றி கொண்டாட்டத்தில் கவினும், லொஸ்லியாவும் கலந்துக் கொண்டார்கள். அப்போது இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்து பேசியுள்ளார்கள்.

 

Losliya

 

kavin

Related News

7234

நான் ஆசைப்பட்ட திரைப்படம் ‘நீளிரா’! - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி
Saturday March-21 2026

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல! - பரத் உறுதி
Saturday March-21 2026

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என்...

பாரம்பரியமான ஆடைகள் தான் பிடிக்கும் - நடிகை காயடு லோஹர்
Saturday March-21 2026

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...

Recent Gallery