Latest News :

இந்திய அளவில் புகழ்பெற்ற மாடல் அழகிகள் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேட்’!
Thursday January-21 2021

ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குநர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.

 

கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான 'பானு ஸ்ரீ ரெட்டி' இந்த படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

 

மாநகரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

ஆதி நடிக்கும் 'பாட்னர்' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷபீர் அஹமது இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பியார் பிரேமா காதல் என்கிற ஹிட் படத்திற்கு படத்தொகுப்பு செய்த மணி குமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார். இக்கு, கிகோரி ஆகிய படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 

பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர்பாராதவிதமாக நடக்கும் திகில் நிகழ்வு தான் படத்தின் கதை. அதை மையப்படுத்தி முழுநீள த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

 

முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ள ‘கேட்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related News

7241

’சாருகேசி’ படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது - நடிகை சுஹாசினி நெகிழ்ச்சி
Tuesday June-24 2025

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் - ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு
Monday June-23 2025

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...

பார்வையாளர்களின் இதயத்தை மாற்றக்கூடிய படமாக ‘குட் டே’ இருக்கும் - இயக்குநர் ராஜு முருகன்
Sunday June-22 2025

நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க,  அறிமுக இயக்குநர் என்...

Recent Gallery