கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. 100 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தை பாலாஜி கைப்பற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டவர்கள் தற்போது தங்களது அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், வெற்றியாளரான ஆறிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாக்குகள் கிடைத்தது. இதன் காரணமாகவே அவர் வெற்றி பெற்றார். அதே சமயம், பிக் பாஸில் வெற்றி பெற்ற ஆரி, இதுவரை ரசிகர்களுடன் உரையாடவில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த நிலையில், ரசிகர்களுடன் உரையாதது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஆரி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், பிக் பாஸ் வீட்டில் தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், தற்போது வரை தான் அதில் இருந்து மீளவில்லை, என்றும் கூறியிருக்கிறார். ஆரியின் இந்த வீடியோவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளது.
ஆரியில் உடல்நிலை என்ன ஆனாது, அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்று அவர் விளக்கமளித்திருக்கும் வீடியோ இதோ,
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என்...
மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...