நடிகரை அவமானப்படுத்திய ‘குரங்கு பொம்மை’ நாயகி! - சீரியல் படப்பிடிப்பில் பரபரப்பு
Saturday January-23 2021

விதார்த், இயக்குநர் பாரதிராஜா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டெல்னா டேவிஸ். மலையாள நடிகையான இவர், தமிழில் ‘பத்ரா’, ‘விடியும் வரை பேசு’, ‘ஆக்கம்’, ‘49ஓ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், ‘குரங்கு பொம்மை’ படம் மூலம் தான் சற்று பிரபலமானார்.

 

இதற்கிடையே, திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கியவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், சீரியல் படப்பிடிப்பில் நடிகை டெல்னா டேவிஸ், சக நடிகர் ஒருவரை அவமானபடுத்திய சம்பம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

சென்னை, கிழக்கு கடற்கரை சாலை உள்ள படப்பிடிப்பு வீடு ஒன்றில் ‘அன்பே வா’ தொடர் படமாக்கப்பட்டு வருகிறது. டெல்னா டேவிஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, மற்றொரு நடிகர் தனது காட்சிக்கு தயாராவதற்காக மேக்கப் அறையில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது டெல்னா டேவிஸ், அந்த அறையை தன்னை தவிர யாரும் பயன்படுத்தக்கூடாது, என்று கூறி அந்த நடிகரை வெளியேற சொல்லியிருக்கிறார்.

 

அந்த நடிகரோ, ”சிறிது நேரத்தில் சென்றுவிடுகிறேன்” என்று கூற, உடனே காச்சு மூச்சு, என்று சத்தம் போட்ட டெல்னா, இயக்குநரை அழைத்து, அந்த நடிகர் அறையில் இருந்து வெளியேறவில்லை என்றால், படப்பிடிப்பை விட்டு நான் சென்றுவிடுவேன், என்று மிரட்டல் விடுத்தாராம்.

 

உடனே, இயக்குநர் அந்த நடிகரை வேறு எங்காயாவது சென்று மேக்கப் போடுங்கள், என்று கூறி அவரை வெளியேற்றிய பிறகு தான் டெல்னா சாந்தமானாராம்.

 

டிஆர்பி ரேட்டிங்கில் இன்னும் சூடுபிடிக்காத ஒரு சீரியலில் நடிக்கும் போதே நடிகை டெல்னா டேவிஸுக்கு தலைகணம் இப்படி இருக்கிறதே, இன்னும் அந்த சீரியல் நம்பர் ஒன் நிலைக்கு வந்தால், என்ன என்ன செய்வாரோ, என்று படப்பிடிப்பில் இருந்த சிலர் முனு முனுத்தார்களாம்.

 

Related News

7243

பாடகி Dhee-யின் ‘VARI VARI’ இசை ஆல்பம் ஏப்ரல் 24 ஆம் தேதி கொழும்புவில் வெளியீடு!
Wednesday April-22 2026

இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார்...

’29’ பட தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஒயிட் கார்பெட் பிலிம்ஸ்!
Wednesday April-22 2026

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் ( White Carpet Films) திகழ்கிறது...

பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு!
Wednesday April-22 2026

முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் ’ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது...

Recent Gallery