Latest News :

பா.இரஞ்சித் படத்தில் ஹீரோவாக களம் இறங்கும் யோகி பாபு!
Saturday January-23 2021

முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த சில படங்கள் வெற்றி பெற்றதால், அவருக்கு தொடர்ந்து ஹீரோ வாய்ப்பு வந்தாலும், “நான் எப்போதும் காமெடி நடிகர் தான்” என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.

 

இந்த நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித், தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் படத்தில் யோகி பாபு ஹீரோவாக களம் இறங்குகிறார். ‘பொம்மை நாயகி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து யாழி பிலிம்ஸ் சார்பில் வேலவன், லெமுவேல் ஆகியோரும் தயாரிக்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர் ஷான் இயக்கும் இப்படத்தில் சுபத்ரா, ஜி.எம்.குமார், ஹரி, விஜய் டிவி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, ஜெயரகு கலையை நிர்மாணிக்கிறார். கபிலன், அறிவு ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இயக்குநர் பா.இரஞ்சித் கிளாப் போர்ட் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.


Related News

7244

’பீட்சா’, ‘காக்கா முட்டை’ படங்களை தொடர்ந்து ‘பீட்சா பாய்ஸ்’!
Sunday April-19 2026

தமிழ் சினிமாவில் பீட்சா என்ற தலைப்பில் வெளியான படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதே பீட்சாவை மையமாக வைத்து வெளியான ‘காக்கா முட்டை’ படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படங்களை தொடர்ந்து அதே பீட்சா அடையாளம் மட்டும் இன்றி,  அதனுடன் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் புதிய ஐடியாலஜியுடன் உருவாகும் படம் தான் ‘பீட்சா பாய்ஸ்’...

‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் சொல்ல வருவது இதுதான்! - வைரமுத்து கொடுத்த விளக்கம்
Sunday April-19 2026

‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’...

விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புதிய படத்தின் அறிவிப்பு!
Friday April-17 2026

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது...

Recent Gallery