Latest News :

”இருக்குறதை வச்சி எடுத்த படம் தான் இது” - ‘முன்னா’ இயக்குநர் சங்கை குமரேசன் பெருமிதம்
Saturday January-23 2021

ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் ‘முன்னா’. சங்கை குமரேசன் இயக்கி, பாடல்கள் எழுதி நடித்திருக்கும் இப்படத்திற்கு டி.ஏ.வசந்த் இசையமைத்துள்ளார். சுனில் லாசர் பின்னணி இசையமைத்துள்ளார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இயக்குநர்கள் ரமேஷ் செல்வன், ஆர்.வி.உதயகுமார், வி.சேகர், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் மன்சூர் அலிகான், விக்னேஷ், தயாரிப்பாளர் பெப்சி சிவா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகர் விக்னேஷ் பேசுகையில், “வி.சேகர் சாரின் படம் ரஜினி சார் படத்திற்கு சமமாக ஓடும். ஆர்.வி உதயகுமார் சாரின் பெரிய ரசிகன் நான். இவர்கள் எல்லாம் இந்தப்படத்தைப் பாராட்ட வந்திருப்பதைப் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. இந்த விழாவிற்கு என்னை தம்பி புவன் அழைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகள். அவமானங்கள் இல்லாமல் வெற்றியில்லை. இனி நல்ல நல்ல படங்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார். 

 

பெப்சி சிவா பேசுகையில், “இந்த நிகழ்ச்சி உண்மையிலே சந்தோசமாக இருக்கிறது. திருப்பியும் சினிமா புத்துணர்ச்சியோடு நடைபோடத் துவங்கி இருக்கிறது. அதற்கு மாஸ்டர் தான் பெருங்காரணம். தியேட்டரில் சினிமா பார்ப்பது தான் ரசிகர்களுக்கு சந்தோசம். அதை மாஸ்டர் படம் உறுதி செய்துள்ளது. அதுபோல இந்த முன்னா படமும் வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார்.

 

 

இயக்குநர் வி.சேகர் பேசுகையில், “முன்னா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். கொரோனாவிற்கு பின் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி. ஒரு வெற்றிப்படத்திற்கு நல்ல  கதை இயக்குநர் தான் தேவை என்பது உண்மை. ஒரு படம் எடுக்கும் போதே பலபேருக்கு வேலை கிடைத்து விடுகிறது. அந்த வகையில் ஒரு தயாரிப்பாளர் படம் வெளியாகும் முன்பே பலரை வாழ வைக்கிறார். சின்னப்படங்கள் தான் நிறைய பேர்களை வாழ வைக்கிறது. பெரிய படங்கள் ஆலமரம் என்றால் சிறிய படங்கள் தான் நெல் போன்றது. எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார். அதுதானே உண்மை. ஒரு முதலாளியை மதிக்கிற துறை முக்கியம். பெரியபடம் அளவிற்கு நமது சின்னப்படங்களும் ஓட வேண்டும் என்றால் நாம் பெரிய படங்களை விட அதிகமாக உழைக்க வேண்டும். அந்த வகையில் இந்தப்படம் நன்றாக வந்திருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துகிறேன்.” என்றார். 

 

இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேசுகையில், “இந்த முன்னா படத்தின் இயக்குநர் நடிகர் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தக் கொரோனா கால கட்டத்தில் 150 நாட்களுக்கு மேல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உதவி இயக்குநர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நடிகர் விக்னேஷ் எங்களுக்கு பெரிய உதவி செய்தார். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். ரஷ்யாவின் புரட்சிக்கு கூட சினிமா ஒரு உதவியாக இருந்தது. நாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும். இப்போதெல்லாம் ஓவர் பில்டப்பில் தான் படம் எடுக்குறார்கள். நேர்மையாக படம் எடுக்க வேண்டும். நேர்த்தியாக படம் எடுத்தால் எப்படி ஓடாமல் போகும். நம் ரசிகர்கள் சரியான படங்களை நிச்சயமாக ஓட வைப்பார்கள். உழைப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்தப்படம் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்திருக்கிறார்கள். இப்படியான தைரியம் தான் நிறைய பேர்களை உருவாக்கி இருக்கிறது. அதுபோல் இந்த இயக்குநரையும் பெரிதாக உருவாக்கும்.” என்றார்.

 

படத்தின் இயக்குநர் சங்கை குமரேசன் பேசுகையில், “இருக்குறதை வச்சி எடுத்த படம் தான் இது. நிறைய ஏமாற்றங்கள் இருந்தது. ஆனாலும் சொன்னது போல படத்தைத் துவங்கினோம். காரைக்குடி அருகே சுற்றி சுற்றி 34 நாட்கள் எடுத்து முடித்தோம். இந்தக்கதையில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கு. அதனால் கதை நாயகனாக என்னையே நடிக்கும் படி சொன்னார்கள். இந்தப்படத்தின் கதை இருக்குறதை வைத்து வாழ வேண்டும் என்ற ஒருவரி தான். மனதுக்கு நிம்மதியான வாழ்க்கை தான் நல்ல வாழ்க்கை. இந்தப்படத்தின் முக்கிய நோக்கம் எதற்காகவும் கலங்கத் தேவையில்லை என்ற கருத்தைச் சொல்வது தான்.” என்றார்.

Related News

7246

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

Recent Gallery