சிவகார்த்திகேயன் நடிப்பில், எழில் இயக்கத்தில் வெளியான ‘மனம் கொத்தி பறவை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மியா. இப்படத்திற்குப் பிறகு மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் சில படங்களில் நடித்து வந்த ஆத்மியாவுக்கு எதிர்ப்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது சமுத்திரக்கனி நடிப்பில், சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெள்ளை யானை’ படத்திலும், ‘அவியல்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் முடிவடைந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், ஆத்மியாவுக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஆத்மியாவுக்கு அவரது குடும்பத்தார் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். கேரள மாநிலம், கன்னூரைச் சேர்ந்த சனூப் என்பவரை ஆத்மியா திருமணம் செய்ய உள்ளார். சனூப் கப்பலில் பணியாற்றி வருகிறாராம்.
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆத்மியா - அனூப் திருமணம் நாளை (ஜனவரி 25) காலை கன்னூரில் நடைபெற உள்ளது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...