ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது இடுப்பு மடிப்பை காட்டி அவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் அவர் பிரபலமானார்.
அவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததோடு சில பட வாய்ப்புகளும் கிடைத்த நிலையில், பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர் வாய்ப்பையும் பெற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்களை நிறைவு செய்த ரம்யா பாண்டியன் 4 வது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, அவருக்கும் சக போட்டியாளர் சோம் சேகருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. மேலும், ரம்யா பாண்டியனின் தம்பி, சோம் சேகரை மச்சான் என்றும் அழைத்தார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ரம்யா பாண்டியன் வெளியேறியிருக்கும் நிலையில், அவரது தம்பியிடம் ரசிகர் ஒருவர், “சோம் சேகரும், ரம்யா பாண்டியனும் எப்போது இணைய போகிறார்கள்” என்று கேட்க, அதற்கு அவரோ, அவர்கள் இணைவது அவர்கள் கையில் தான் இருக்கிறது, என்று பதில் அளித்துள்ளார்.
ஆக, சோம் சேகர், ரம்யா காதலிப்பது உண்மை என்றால், அவர்களது திருமணத்திற்கு ரம்யா பாண்டியன் குடும்பம் பச்சைக்கொடு காட்டும் என்பது தெரிகிறது. ஆனால், அவர் இப்போதைக்கு திருமணம் செய்துக்கொள்வாரா என்பது தான் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...