நடிகர், நடிகைகள் தற்கொலைகள் ரசிகர்களையும் திரையுலகினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதிலும், மன அழுத்தம் காரணமாக இளம் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்த ஜெயஸ்ரீ ராமைய்யா, நேற்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமாவில் பல படங்களில் நாயகியாக நடித்து வந்த ஜெயஸ்ரீ ராமைய்யா, பிக் பாஸ் சீசன் 3-யில் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று, இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம், இவ தனது பேஸ்புக் பக்கத்தில், ”I quit. Goodbye to this world and depression” என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், ஜெயஸ்ரீ அந்த பதிவை நீக்கியுள்ளார்.
அடையடுத்து, தனது பேஸ்புக் பதிவு பப்ளிசிக்காக அல்ல, தான் உண்மையிலேயே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தவித்து வருவதாக, தனது பேஸ்புக் நேரலையில் கூறியவர், தற்போது தற்கொலை செய்துக்கொண்டிருப்பது ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...