‘பீட்சா’, ‘சேதுபதி’ என விஜய் சேதுபதியுடன் இரண்டு முறை ஜோடி போட்ட ரம்யா நம்பீசன், தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் நடிக்க தான் விரும்புவதாக கூறியுள்ளார்.
‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, ‘சத்யா’ ஆகிய படக்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன் கன்னடப் படம் ‘குருஷேத்ரா’-விலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தொலைக்காட்சிக்கு ஒன்று அளித்த பேட்டியில், “தமிழில் ‘பீட்சா’ படத்துக்கு முன்பே நான் நடித்து வருகிறேன். என்றாலும் விஜய் சேதுபதியுடன் நடித்த பிறகு தான் பேசப்பட்டேன். ‘பீட்சா’வுக்கு பிறகு பல படங்களில் நடித்தேன், ஆனால் ‘சேதுபதி’ நடித்த போது தான் என்னைப்பற்றி மீண்டும் பேசினார்கள். விஜய் சேதுபதியுடன் நடித்த இரண்டு படங்களுமே எனக்கு நல்ல பெயர் பெற்று தந்தன. ‘சேதுபதி’யில் நாங்கள் நடித்த காதல் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மீண்டும் அவருடன் நடிக்க நான் முயற்சி செய்யவில்லை. என்றாலும், விஜய்சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கேற்ற கதைகள் வரும் போது, நிச்சயம் அந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று ரம்யா நம்பீசன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...