ஆஸ்கர் போட்டியில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’!
Wednesday January-27 2021

இந்திய திரையுலகினரால் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்றுள்ளது.

 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி ஆகியோர் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி கடந்த ஆண்டு அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

 

இந்த நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதனடி, ஒடிடி தளங்களில் நேரடியாக வெளியான திரைப்படங்கள் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

அந்த வரிசையில் பொதுப்பிரிவில் ’சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.

 

இந்த பொதுப்பிரிவுப் போட்டியில் ’சூரரைப் போற்று’ திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள்.

 

இது குறித்து  படத்தின் இணை தயாரிப்பாளர் இராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கூறுகையில், “உலக திரையுலகினரின் பாராட்டுகளை அள்ளிய ’சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்” என்றார்.

Related News

7252

நான் ஆசைப்பட்ட திரைப்படம் ‘நீளிரா’! - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி
Saturday March-21 2026

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல! - பரத் உறுதி
Saturday March-21 2026

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என்...

பாரம்பரியமான ஆடைகள் தான் பிடிக்கும் - நடிகை காயடு லோஹர்
Saturday March-21 2026

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...

Recent Gallery