பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்களிடம் பிரபலமடைந்த நடிகை வனிதா, தனது நான்காவது திருமணம் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கினார். பலர் எதிர்ப்புகளுக்கிடையே பீட்டர் பால் என்ற திருமணமான நபரை நான்காவதாக திருமணம் செய்துக் கொண்ட வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் ஒரு சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து பீட்டர் பாலை பிரிந்த வனிதா, தனது கையில் குத்திய பீட்டர் பாலின் டாட்டூவை அழித்ததோடு, “இனி எந்த நாதாரி பெயரையும் டாட்டூ” குத்திக் கொள்ளப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், தனது யுடியுப் சேனலில் வீடியோக்களில் பதிவிடுவதில் தனது முழு கவனத்தையும் செலுத்துவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகை வனிதா மீண்டும் கதாநாயகியாக களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கும் ஆடம் தாசன் தான் இப்படத்தை இயக்குகிறாராம்.
ஏற்கனவே ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை ஆடம் தாசன் இயக்கியுள்ளார். நடிகர் மனோபாலா தயாரித்த இப்படத்தில் பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருந்தார்.
தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ள இயக்குநர் ஆடம் தாசன், முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் ஒண்ட படத்தை இயக்க உள்ளாராம். ‘அனல் காற்று’ என்று தலைப்பு வைத்திருக்கும் இப்படத்தில் வனிதா தான் கதையின் நாயகியாக நடிக்கிறாராம். இதற்காக, வனிதா தனது உடல் எடையை குறைத்துக் கொண்டிருப்பதாகவும், இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...